மீன்பிடி தடை காலம் முடிவடைந்த நிலையில் கடலுக்குள் சென்ற மீனவர்கள் எதிர்பார்த்த அளவு மீன்கள் கிடைத்துள்ளதால் மீனவர்கள் மகிழ்ச்சி
ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்கள் வலையில் எதிர்பார்த்த அளவு மீன்கள் சிக்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மீன்பிடி தடை காலம் முடிவடைந்த நிலையில் ராமேஸ்வரம் பாம்பன் துறைமுக பகுதியில் இருந்து 90 க்கும் அதிகமான மீன்பிடி விசைப் படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்றிருந்தனர். இந்த நிலையில் கரை திரும்பிய மீனவர்கள் வலையில் எதிர்பார்த்த அளவு மீன்கள் கிடைத்துள்ளதால் அப்பகுதியில் மீன் வர்த்தகம் களை கட்டியுள்ளது.
Tags :















.jpg)

.jpg)
.jpg)
