மூத்த குடிமக்களுக்கு சலுகைகள் குறித்து வெளியான செய்திகளுக்கு மத்திய அரசு மறுப்பு

ஜூலை 1 முதல் டிக்கெட் உள்ளிட்ட சலுகைகள் இந்திய ரயில்வேயில் மீண்டும் வழங்க உள்ளதாக வெளியான தகவல்களை அரசு மறுத்துள்ளது. தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு சலுகைகள் வழங்குவது தொடர்பாக எந்த அறிவிப்பும் ரயில்வே அமைச்சகம் வெளியிடவில்லை என்றும் தற்போது வரை நோயாளிகள் மாணவர்கள் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :