விவசாயிகள் பாதிப்படையக்கூடிய எந்த திட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வராது- பாஜக தலைவர் அண்ணாமலை

by Admin / 06-04-2023 10:48:55am
விவசாயிகள் பாதிப்படையக்கூடிய எந்த திட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வராது-  பாஜக தலைவர் அண்ணாமலை

விவசாயிகள் பாதிப்படையக்கூடிய எந்த திட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வராது என்று தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை,வசாய மண்டலமாக உள்ள டெல்டா பகுதியில் தஞ்சையை சுற்றியுள்ள பகுதிகளில் இரண்டு நிலக்கரி சுலங்கங்களை அமைப்பதற்கான ஆரம்ப கட்டப் பணிகளை மத்திய அரசின் சார்பாக செய்து வந்த நிலையில், பல்வேறு கட்சிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்ற நிலையில் தமிழக அரசும் நிலக்கரி சுரங்கம் டெல்டா பகுதிகளில் வராது என்பதை உறுதியாக சொன்னதோடு பிரதமருக்கும் இதுகுறித்து அவர் கடிதம் எழுதி உள்ளார்.  இந்நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை , பொறுத்திருங்கள் இன்னும் ஒரு சில நாள்களில் நல்ல பதில் வரும். டெல்டா பகுதிகளில் கண்டிப்பாக மக்களை பாதிக்க கூடிய -விவசாயத்தை பாதிக்கக்கூடிய எந்த  செயலையும் மத்திய அரசு செய்யாது  என்று தெளிவுபடுத்தினார்

 

 

Tags :

Share via