தென்காசி,மதுரை மாநகர்  முழுவதும் பலத்த காற்று இடி-மின்னலுடன் மழை: புறநகர் பகுதிகளில் ஆலங்கட்டி மழை -.

by Editor / 24-04-2023 12:26:53am
தென்காசி,மதுரை மாநகர்  முழுவதும் பலத்த காற்று இடி-மின்னலுடன் மழை: புறநகர் பகுதிகளில் ஆலங்கட்டி மழை -.

தமிழகத்தில் கோடை வெயில் காலம் தொடங்கியதிலிருந்து மதுரையில்  100 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. இன்று காலையிலிருந்து வெயில் 100 டிகிரிக்கு மேலாக அடித்த நிலையில் திடிரென பலத்த காற்று வீசியது. இடி-மின்னலுடன் மழை பெய்யத்துவங்கியது.

 பசுமலை, பைக்கரா, அழகப்பன் நகர், பழங்காநத்தம், வசந்த நகர், ஆண்டாள்புரம் நேரு நகர் பைபாஸ் சாலை காளவாசல் குரு தியேட்டர்  மாடக்குளம் , மாட்டுத்தாவணி கருப்பாயூரணி அண்ணாநகர் தெப்பக்குளம் கீழவாசல் கோரிப்பாளையம் , பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்று இடி- மின்னலுடன் கோடைமழை பெய்யத்துவங்கியது.

புறநகர் பகுதிகளான நிலையூர்,  கூத்தியார் குண்டு, நேரு நகர் உள்ளிட்ட உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்ததால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கையில் எடுத்து வைத்து விளையாடி மகிழ்ந்தனர்.

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை வெயில் தாக்கம் இன்று காலை முதலே அதிகரித்து நிலையில் வெயிலில் தாக்கம் தாங்க முடியாமல் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் இருந்து வந்த நிலையில் தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த 15 நிமிடமாக குற்றாலம் ஐந்தருவி இலஞ்சி,வல்லம், குண்டாறு ,புளியரை, செங்கோட்டை, பண்பொழி, மேக்கரை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி,மின்னலோடு கூடிய கனமழை பெய்து வருகிறது இதன் காரணமாக மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

 

 

Tags :

Share via

More stories

Logo