மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி வேண்டும் - சசி தரூர்

by Staff / 07-05-2023 01:04:55pm
மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி வேண்டும் - சசி தரூர்

கலவரம் வெடித்துள்ள மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்பியுமான சசி தரூர் கோரிக்கை விடுத்துள்ளார். பாஜக வாக்குறுதியளித்த நல்லாட்சி, மணிப்பூர் வாக்காளர்கள் ஏமாற்றப்பட்டு விட்டார்கள் என்று இந்தியர்கள் அனைவரும் சிந்திக்க வேண்டும் என்று தரூர் ட்வீட் செய்துள்ளார். மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில், மணிப்பூர் வாக்காளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வரும் நேரம். மாநில அரசு தான் தேர்ந்தெடுக்கப்பட்ட பணியை செய்ய தயாராக இல்லை என்று தரூர் கூறினார்.

 

Tags :

Share via

More stories