ரயில் விபத்து.. ஓட்டுநர் மீது தவறு இல்லை

ஒடிசா பஹானாகா ரயில் விபத்தில், கோரமண்டல் விரைவு ரயில் ஓட்டுநர் மீது எந்த தவறும் இல்லை என ரயில்வே செயல்பாடுகள் துறை அதிகாரி ஜெயா வர்மா சின்ஹா தகவல் தெரிவித்துள்ளார். மேலும், கோரமண்டல் ரயிலுக்கு பச்சை சிக்னல் கிடைத்ததால்தான் ஓட்டுநர் ரயிலை இயக்கியதாகவும், அனுமதிக்கப்பட்ட வேகமான 130கி.மீ. வேகத்தை விட 128 கி.மீ. வேகத்திலேயே ரயில் சென்றதாகவும் ஜெயா வர்மா விளக்கமளித்துள்ளார். மேலும், ஒடிசா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags :