உஜ்வாலா திட்டம்: எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.100 குறைப்பு

by Staff / 04-10-2023 04:04:59pm
உஜ்வாலா திட்டம்: எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.100 குறைப்பு

உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.100 குறைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ரூ.200 ஆக இருந்த மானியத் தொகை ரூ.300 ஆக உயர்த்தப்படுகிறது. சமீபத்தில் ரக்ஷாபந்தன் பண்டிகையையொட்டி, வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

 

Tags :

Share via

More stories