ஹமாஸ் தளங்களை அழிப்பதே எங்கள் நோக்கம்

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே 16-வது நாளாக உச்சக்கட்ட போர் நாள் தீவிரமடைந்து வருகின்றன. காசாவை ஏற்கனவே தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ள இஸ்ரேல், வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், காசா நகரின் சில இடங்களில் இரவு நேரத்தில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஹமாஸின் கூட்டத் தளங்களைத் தாக்கி அழிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறுகின்றனர். இஸ்ரேலின் ராணுவ செய்தி தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கூறுகையில், அடுத்த தாக்குதல் போருக்கு தயாராகும் போராளிகளை ஒழிக்கும் நோக்கில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.
Tags :