வருமான வரி துறையினர் அச்சுறுத்தியதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு குற்றச்சாட்டு.

by Editor / 08-11-2023 09:26:21am
 வருமான வரி துறையினர் அச்சுறுத்தியதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு குற்றச்சாட்டு.

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றது.

இதனை தொடர்ந்து திருவண்ணாமலை திமுக மாவட்ட அலுவலகத்தில்  பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசியவர், வருமான வரி துணையினர் தன்னை மட்டுமல்லாமல் தன்னை சார்ந்தவர்களையும் கடந்த ஐந்து நாட்களாக அச்சுறுத்தும் விதமாக நடந்து கொண்டதாகவும், குறிப்பாக காசா கிராண்டே, அப்பாசாமி ரியல் எஸ்டேட் ஆகியவைகளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை .மேலும் இந்த ஐந்து நாட்கள் கற்பனையான செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன எனவும், தன் வீட்டில், தன் மனைவி வீட்டில், தன் மகன்கள் வீட்டில் ஒரு ரூபாய் கூட வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்யவில்லை எனவும், அபிராமி தியேட்டர் உரிமையாளர் யார் என்று எனக்கு தெரியாது ..

தமிழகத்தில் பி.ஜே.பி.யை சேர்ந்த தொழிலதிபர்கள் வீடுகளில் வருமானவரி துறையினர் சோதனை செய்வது இல்லை என்றும், இந்த சோதனையில் தன்னுடைய கழக பணி, தன்னுடைய அரசு பணி ஐந்து நாட்களும் முடங்கியதாகவும்,  வருமான வரித்துறை பா.ஜ.க.வின் ஐடி விங்காக மாறிப்போயுள்ளது.என கூறினார்.

இந்த வருமானவரி துறையினர் சோதனைக்கு எல்லாம் அஞ்சியவர்கள் நாங்கள் கிடையாது எனவும், சரஸ்வதி அம்மாள் அறக்கட்டளைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது எனவும், என் பெயரில் 48 ஏக்கர் 33 சென்ட் நிலமும், காந்திநகரில் ஒரு வீடும் தான் உள்ளது என்றும், நான் தொடர்ந்து வருமான வரித்துறைக்கு வரி செலுத்தி வருவதாகவும், தற்போது நடைபெற்ற இந்த வருமான வரித்துறை சோதனையினால் தான் மற்றும் தன்னை சார்ந்தவர்கள் சிரமத்திற்கு தள்ளப்பட்டதாகவும் ஆதலால், வருமான வரி துறையினரின் மீது தனக்கு எந்தவித வருத்தமும் இல்லை என செய்தளர்களிடம் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேட்டி அளித்தார்.

 

Tags : பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

Share via