குற்றாலம் பேரருவியில் ஆறாவது நாளாக குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கம்.குளிக்க அனுமதி

by Editor / 23-12-2023 09:46:53am
குற்றாலம் பேரருவியில் ஆறாவது நாளாக குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கம்.குளிக்க அனுமதி

குற்றாலம் பேரருவியில் ஆறாவது நாளாக குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கம்.-குளிக்க அனுமதி..சுற்றுலாப்பயணிகள் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு.

தென்காசி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 17,18  ஆகிய தினங்களில் பெய்த கன மழை காரணமாக குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது

. இந் நிலையில், தற்போது வரை குற்றாலம் பேரருவி, பழைய குற்றாலம் அருவியில் வெள்ளம் நீடித்து உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் ஐயப்ப பக்தர்கள் குளிப்பதற்கு தடை நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாதுகாப்புவளையத்தை தாண்டி தண்ணீர் கொட்டிவருவதால் சுற்றுலாப்பயணிகள்,அய்யப்ப பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு குளிக்க விதிக்கப்பட்டதடை இன்று அதிகாலை 7வது நாளாக நீடித்த நிலையில், நீர்வரத்து பாதுகாப்பு வளையத்தின் உள் பகுதிகளில் கொட்டி வருவதால் நீர்வரத்தும் சற்று குறைந்ததாலும் ஐயப்பபக்தர்கள்,சுற்றுலாப்பயணிகள் குளிக்க தற்போது அனுமதியளிக்கப்பட்டுள்ளது

.இதனைத்தொடர்ந்து அய்யப்ப பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.குளிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதால் அருவிக்கரையில் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதிவருகிறது.

மேலும் இன்று முதல் அரையாண்டுத்தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது

 

Tags : குற்றாலம் பேரருவியில் ஆறாவது நாளாக குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கம்.குளிக்க அனுமதி

Share via