கள்ளக் காதலிக்கு அரிவாள் வெட்டு
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரைச் சேர்ந்தவர் சேகர். மனைவி வள்ளிக்கண்ணு (59). இந்த தம்பதியருக்கு ஒரு மகன் உள்ளார். வள்ளிக்கண்ணு பணி நிமித்தமாக திருச்சி பாலக்கரை பகுதியில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் ஜான்சன் (55) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது கள்ளக்காதலாக மாறியது. ஜான்சன் தனது வீட்டை புதுப்பித்து கட்டுவதற்காக வள்ளிக்கண்ணுவிடம் ரூ.2 லட்சம் பணம் கேட்ட நிலையில், அவர் கொடுக்க மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த ஜான்சன் வள்ளிக்கண்ணுவை அரிவாளால் வெட்டினார். தலை, தோள்பட்டையில் பலத்த காயமடைந்த வள்ளிக்கண்ணுவை மீட்ட அக்கம்பக்கத்தினர், திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் ஜான்சன் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Tags :














.jpg)




