13 வயது சிறுமி கர்ப்பம்; மாற்றாந்தந்தைக்கு 83 ஆண்டுகள் சிறை

by Staff / 01-02-2024 11:43:49am
13 வயது சிறுமி கர்ப்பம்; மாற்றாந்தந்தைக்கு 83 ஆண்டுகள் சிறை

வட மாநிலத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய மாற்றாந்தந்தைக்கு 83 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் அபராதமும் விதித்து கேரளாவின் பெரும்பாவூர் கூடுதல் விரைவு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆகஸ்ட் 2021இல், இந்த சம்பவம் குருபூம்பாடியில் நடந்துள்ளது. ப்ளைவுட் நிறுவனத்தில் சிறுமியின் தாயுடன் பணிபுரிந்த குற்றவாளியான அசாமைச் சேர்ந்த இச்சிபுல் இஸ்லாம், சிறுமியின் தாயுடன் பழகி அவருடன் வசித்து வந்துள்ளார். பின்னர் தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் சிறுமியை பலமுறை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். சிறுமி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, ​​​​கர்ப்பமாக இருப்பதை மருத்துவர் கண்டுபிடித்தார். இதுகுறித்து மருத்துவர் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை கைது செய்தனர்.

 

Tags :

Share via

More stories