தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டம் தொடக்கம்
டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் தற்போது தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தில் நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். தங்களது ஆதரவு இல்லாமல் பாஜக ஆட்சியமைக்க முடியாது என்பதால் அமைச்சரவையில் முக்கிய இலாக்காக்கள், சபாநாயகர் பதவியை இருவரும் கேட்டு வருகின்றனர். மத்திய அமைச்சரவையில் முக்கிய இலாக்காக்களை இரண்டு கட்சிகளும் கேட்பதால் பாஜக குழம்பிப்போய் உள்ளது. பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என ஐக்கிய ஜனதா தளம் போர்க்கொடி தூக்கியுள்ளது.
Tags :



















