ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நெல்சனிடம் விசாரணை

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தேடப்படும் ரவுடி மொட்டை கிருஷ்ணனுடன் தொடர்பில் இருந்ததாக கூறி இயக்குநர் நெல்சன் மனைவியும், வழக்கறிஞருமான மோனிஷாவிடம் சில தினங்களுக்கு முன்பு தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 24) நெல்சனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags :