கோவில்பட்டியில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக மற்றும் பாஜகவினர் மீது போலீசார் வழக்கு பதிவு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து அண்ணா பஸ் நிலையம் அருகே அதிமுகவினர் அண்ணாமலை உருவ பொம்மையை எரித்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்ணாமலை உருவ பொம்மை எரிக்கப்பட்டதை கண்டித்து அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜகவினர் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக நகர செயலாளர் விஜயபாண்டியன் மற்றும் அதிமுகவைச் சேர்ந்த 10 பேர் மீது கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்
அதேபோன்று போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக நகரத் தலைவர் சீனிவாசன் உள்பட பாஜகவினர் 20 பேர் மீது கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Tags : கோவில்பட்டியில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக மற்றும் பாஜகவினர் மீது போலீசார் வழக்கு பதிவு