மகாராஷ்டிராஅமராவதி எம்.எல்.ஏசகோதரி நேற்று மர்ம நபர்களால் கத்தியால் குத்தப்பட்டார்.

பாரதிய ஜனதா கட்சி அமராவதி எம்எல்ஏவும் தற்போதைய வேட்பாளருமான பிரதாப் அட்சயாத்தின் சகோதரி நேற்று மர்ம நபர்களால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் மகாராஷ்டிராதேர்தலில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாளை 20-ம் தேதி மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பா.ஜ.க வேட்பாளரின் சகோதரி அர்ச்சனா ரோத்தே அமராவதி அருகே உள்ள பாட்டா பகுதியில் காரில் இருந்து இறங்கி நின்ற பொழுது இரண்டு நபர்கள் அவரை பின்னால் கத்தியால் குத்தியுள்ளனர். அவரது இடது கை உட்பட மூன்று இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கத்திக்குத்துக்கான காரணம் இதுவரை தெரிய வில்லை என்றும் மேற்கொண்டு விசாரணை நடந்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Tags :