இபிஎஸ் உறவினர் வீட்டில் 3வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினரான ராமலிங்கத்திற்கு சொந்தமான கட்டுமான நிறுவனங்களில் 3வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஈரோட்டில் உள்ள தொழிலதிபர் ராமலிங்கத்திற்கு சொந்தமான ஆர்சிசிஎல் என்ற நிறுவனம், அவரது வீடு உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து 3வது நாளாக இன்றும் சோதனை தொடர்கிறது. ஈரோடு, பெங்களூரு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடந்து வருகிறது.
Tags : இபிஎஸ் உறவினர் வீட்டில் 3வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை.