7 மாவட்டங்களில் கனமழைவாய்ப்பு.

தமிழ்நாட்டில் சென்னை, தூத்துக்குடி, மதுரை, பாளையங்கோட்டை, அதிராமபட்டினம் உள்ளிட்ட 9 இடங்களில் வெயில் சதம் அடித்ததால் மக்கள் அவதியடைந்தனர். தமிழ்நாட்டில் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் கடந்த 28-ம்தேதி முடிந்தாலும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
இந்தநிலையில் ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழ்நாட்டில் வரும் 15-ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Tags : 7 மாவட்டங்களில் கனமழைவாய்ப்பு.