செல்போன் பார்ப்பதை கண்டித்த தந்தை.. 13 வயது சிறுவன் தற்கொலை

கர்நாடக மாநிலம் உத்தரகன்னடா மாவட்டத்தைச் சேர்ந்தவர் மனோகர் என்பவரது மகன் ஓம் கதம் (13). பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சிறுவன், தினமும் செல்போனை அதிகளவு பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் (ஜூலை 16) பள்ளி முடிந்து வீடு திரும்பிய ஓம் கதம், செல்போன் பார்த்து கொண்டிருந்தார். இதை பார்த்து ஆத்திரமடைந்த தந்தை, செல்போனை பறித்ததுடன், சிறுவனை கண்டித்துள்ளார். இதனால், மனமுடைந்த சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
Tags :