பேரூராட்சி பிரச்னை திமுக நிர்வாகியின் மண்டை உடைப்பு.

சிவகங்கை மாவட்டம் புவனகிரி பேரூராட்சி செயல் அலுவலர் தனுஷ்கோடிமீது மோசடி, மிரட்டல் புகார் காரணமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்த நிலையில் திருப்பத்தூர் காவல்நிலையத்தில் விசாரணைக்கு வந்தபோது இந்த பிரச்சனைக்கு காரணம் திமுக நகரச் செயலாளர் சண்முகம் தான் என்று கூறி பேரூராட்சி செயல் அலுவலர் தனுஷ்கோடி வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.இந்தநிலையில்
திமுக நகரச் செயலாளர் சண்முகத்தை பேப்பர் வெயிட்டைக் கொண்டு தாக்கியுள்ளார். இதில் சண்முகத்தின் மண்டை உடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சண்முகத்தை தாக்கி மண்டையை உடைத்தவர் கைது செய்யப்பட்டார்.
Tags : திமுக நிர்வாகியின் மண்டை உடைப்பு.