உடல் உறுப்பு தானம் குறித்து தமிழக முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் ...

by Admin / 03-08-2025 09:37:52am
உடல் உறுப்பு தானம் குறித்து தமிழக முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் ...

உடல் உறுப்பு தானம் குறித்து தமிழக முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் தம் எக்ஸ் பக்கத்தில்,

உயிர் பிரிந்த பின் தமது உடற்பாகங்கள் தீக்கும் மண்ணுக்கும் இரையாகாமல், பிறரது வாழ்வுக்குத் துணையாவதே பெருவாழ்வு! அதனால்தான், துணை முதலமைச்சராக இருந்தபோது, எனது உடலுறுப்புகளைக் கொடையளித்தேன்; முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின், உடலுறுப்புகளைக் கொடையளிப்போருக்கு அரசு மரியாதையுடன் விடை கொடுக்கப்படும் என்று அறிவித்தேன். 2023 செப்டம்பர் 23-இல் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது முதல், இதுவரையில் 479 பேர் (கடந்த ஆண்டு மட்டும் 268 பேர்) தங்களது உடலுறுப்புகளை ஈந்து, பல நூறு உயிர்களை வாழ வைத்திருக்கிறார்கள்! அவர்களுக்கு எனது வணக்கம்! உடலுறுப்புத்தானத்தில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாகி இருப்பது கூடுதல் சிறப்பு.  இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories