கொடநாடு, கர்சன் எஸ்டேட் வங்கிக் கணக்குகள் முடக்கம்
கொடநாடு, கர்சன் எஸ்டேட் வங்கிக்கணக்குகள் வருமானவரித்துறை அதிகாரிகளால் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா ஆகியோரின் சொத்துக்கள் தொடர்ந்து முடக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த செப். மாதம் ரூ.100 கோடி மதிப்பிலான சசிகலாவுக்கு சொந்தமான பையனூர் பங்களா முடக்கப்பட்டது. தற்போது வரை ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொடநாடு, கர்சன் எஸ்டேட் வங்கிக்கணக்குகள் வருமானவரித்துறை அதிகாரிகளால் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. வரிபாக்கி நிலுவையில் இருந்த கொடநாடு எஸ்டேட் பங்களா மற்றும் கர்சன் எஸ்டேட் ஆகியவற்றின் வங்கிக்கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
Tags :