சென்னை மழை ராகுல் காந்தி டுவிட்

by Admin / 12-11-2021 06:39:02pm
சென்னை மழை ராகுல் காந்தி டுவிட்

சென்னை மழை கவலை அளிக்கிறது- ராகுல் காந்தி டுவிட்டர் பதிவு
   
காங்கிரஸ் தொண்டர்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதி மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை செய்ய வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார்.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதியிலும் பெய்து வரும் கனமழையால், பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

விடிய விடிய பெய்த கனமழை காரணமாக, இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு மக்கள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
 
இந்நிலையில், சென்னையில் இடைவிடாது பெய்து வரும் கனமழை கவலை அளிப்பதாக ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அந்த பதிவில், “மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.

காங்கிரஸ் தொண்டர்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதி மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை செய்ய வேண்டும்” என தெரிவித்து உள்ளார்.

 

Tags :

Share via

More stories