41 தொழிலாளர்களுக்கு எய்ம்ஸ்-ல் சிகிச்சை

உத்ரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்கள், நேற்று மீட்கப்பட்டனர். இதனையடுத்து அவர்கள் ஹெலிகாப்டர் மூலம் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கே அவர்களுக்கு, ரத்தப் பரிசோதனை, இதய பரிசோதனை உள்ளிட்ட பிரசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது பினர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். அதனையடுத்து, அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறதா இல்லை அவர்களை டிஸ்சார்ஜ் செய்யலாமா என்பதை மருத்துவர்கள் முடிவு செய்வார்கள். மேலும், யாருக்கும் உடல் ரீதியாக காயம் இல்லை, மன அழுத்தமும் இல்லை.
Tags :