திண்டிவனம் அருகே போலீஸ் என கூறி பணம் பறித்த மூன்று பேர் கைது.

by Editor / 20-08-2024 11:32:08pm
திண்டிவனம் அருகே போலீஸ் என கூறி பணம் பறித்த மூன்று பேர் கைது.

சென்னை,அம்பத்தூர்,வெங்கட்ராமன் ஐயர் தெருவை சேர்ந்த பாலகோவிந்ததாஸ் மகன் ஹிதேஷ்பிஷா (44) தனியார் கல்லூரி நிர்வாக உதவியாளர். இவருக்கு பேஸ்புக் மூலமாக ராஜராஜன் (32) என்பவர் நண்பரானார். ராஜராஜன் தனக்கு கஸ்டம்ஸ் ஆபீஸில் பழக்கம் உள்ளது. அதன் மூலமாக தங்கம் 10 முதல் 20% வரை குறைவாக வாங்கலாம் எனதெரிவித்துள்ளார். இதை நம்பிய ஹிதேஷ் பிஷா கடந்த 3ஆம் தேதி ராஜராஜன் தெரிவித்தபடி 35 லட்ச ரூபாய் பணம் எடுத்துக்கொண்டு சென்னையில் இருந்து ஒரு காரில் ஆக்டிங் டிரைவர் ஆனந்தன் (32) என்பவரை அழைத்துக் கொண்டு திண்டிவனம் சென்று கொண்டிருந்தார். திண்டிவனம் புறவழிச் சாலை சந்திப்பில் உள்ள தனியார் ஓட்டலுக்கு வரும்படி தெரிவித்து ராஜராஜன் காரில் ஏறிக்கொண்டார். அப்போது விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தீவனூர்-கூட்டேரிப்பட்டு ரோட்டில் செல்லும்படி ராஜராஜன் கூறியுள்ளார். அதன் பேரில் கார் அந்த வழியாக சென்று கொண்டிருந்த போது மற்றொரு காரில் வந்த ஏழு நபர்கள் நாங்கள் போலீஸ் என கூறி உங்களை சோதனை செய்ய வேண்டும் என காருடன் டிரைவர் ஆனந்தன், ஹிதேஷ் பிஷாவை கடத்தி சென்று சிறிது தூரம் சென்றவுடன் காரில் வைத்திருந்த 35 லட்ச ரூபாய் பணம்
ஹிதேஷ்பிசாவிடம் இருந்த இரண்டு பவுன் செயின் இரண்டு செல்போன்கள் ஆகியவற்றை மிரட்டி பரித்துள்ளனர். இந்நிலையில் வந்தவர்கள் போலீஸ் இல்லை என்பதை உணர்ந்து பதறி போய் ஹிதேஷ் பிஷா கத்தி கூச்சலிட்டத்தை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து அவர்கள் வந்த காரில் பணம் ,நகை செல்போன் உள்ளிட்டவற்றை பறித்து சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஹிதேஷ்பிஷா ரோஷனை காவல் நிலையத்தில் புகார் செய்தார் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை செய்து வருகிறார்கள்.மேலும் குற்றம் நடைபெற்ற நேரத்தில் அந்த வழி கிடைத்த செல்போன் சிக்னல்களை வைத்து தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில் பணத்துடன் தப்பி ஓடிய புதுச்சேரி நோணாங்குப்பம் பகுதியை சேர்ந்த  லோகு (35),காட்டேரிகுப்பத்தை சேர்ந்த  சந்துரு (22), தினேஷ் (19) ஆகிய மூன்று பேரையும் பிடித்து திண்டிவனம் ரோஷனை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.இந்நிலையில் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் குற்றவாளிகள் என்பது  அவர்களிடமிருந்து 2 லட்சம் பணம் மற்றும் ஒரு  பைக் ஆகியவை  பறிமுதல் அவர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்து சிறையில் அடைத்தனர்.
 

 

Tags : திண்டிவனம் அருகே போலீஸ் என கூறி பணம் பறித்த மூன்று பேர் கைது

Share via