அண்ணாமலையார் கோவில் மலையின் கீழ் பகுதியில் ஆயிரக்கணக்கான டன் இருடியம் உள்ளது-வழக்கறிஞர் யானைராஜேந்திரன்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் மலை அடிவாரம், கிரிவல பாதையில் உள்ள சட்டவிரோத கட்டிடங்கள், ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்ட இடத்தினை பார்வையிட்டார்.
இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களைசந்தித்தார்: இங்குள்ள 135 குளங்களை ஆக்கிரமித்து வீடுகள், விடுதிகள் கட்டப்பட்டுள்ளது என்றும், இந்த அனைத்து குளங்களும் நீர்நிலைகளாக மாற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது எனவும், அந்த பணிகளை அதிகாரிகள் செய்து வருவதாகவும், கடந்த 1ம் தேதி மழையினால் மலையில் மண் சரிவு ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், நான் தாக்கல் செய்துள்ள மனுவினால் இந்த மலையில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது என குறிப்பிட்டுள்ளேன் என்றும், தற்போது பெய்த மழையினால் சிவன் நெற்றிக்கண் திறந்திருக்கிறார் எச்சரிக்கையாக இருங்கள் என்று ஒரு வாய்ப்பை கொடுத்திருக்கிறார் எனவும், இதே மழை கூடுதலாக ஒரு மணி நேரம் பெய்திருந்தால் பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கும்,மலையின் வடக்கு, கிழக்கு பக்கத்தில் கிட்டதட்ட 4 ஆயிரத்து 500 வீடுகள் உள்ளது என்றும், அத்தனையும் பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்படும் அதனால் அரசு இதில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இந்த மலையின் கீழ் பகுதியில் ஆயிரக்கணக்கான டன் இருடியம் உள்ளது என்றும், மலைக்கு அடியில் இருடியம் உள்ளதை நாசாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும், இதனை திருவண்ணாமலையை சேர்ந்த ஒரு விஞ்ஞானி தான் தெரிவித்தார் என்று கூறினார்.
இதனால் அதன் அருகில் யாராவது இருந்தால் பாதிக்கப்படுவார்கள் எனவும், அந்த சூழ்நிலையில் இங்கு குடியிருக்கும் மக்கள் உள்ளனர், அவர்களை காப்பாற்ற வேண்டும் என்றால் அந்த மலையில் இருந்து அனைவரையும் அப்புறப்படுத்தி வேறு இடத்தில் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்து அவர்களை குடியமர்த்த வேண்டும் என்று தெரிவித்தார்.
திருவண்ணாமலையில் வாய்க்கால், ஆறு பக்கத்தில் கிடையாது எனவும், மலையில் பெய்யகூடிய மழை அங்கிருந்து பல ஓடைகளாக வந்து 135 குளங்களை நிரப்புகிறது எனவும், இதனால் தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் செழிப்பான நிலையில் இருந்தனர் என்றும், ஆனால் தற்போது ஓடைகள் எல்லாம் ஆக்கிரமிப்பில் உள்ளது எனவும், இதனால் தண்ணீர் வீடுகளுக்குள் வருகிறது, அதனால் ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிங்கள் அனைத்தும் அவர்கள் எந்த செல்வாக்கில் இருந்தாலும் அத்தனையும் அகற்றி பழைய நிலைக்கு கொண்டுவருவதற்கு முயற்சி எடுத்து வருகிறேன் என்றும், மலையில் உள்ள வீடுகளில் சுமார் 2 ஆயிரம் பேர் வீட்டை கட்டிவிட்டு வாடகைக்கு விட்டு விட்டு வெளியே வசித்து வருகின்றனர் என தெரிவித்தார்.
Tags : அண்ணாமலையார் கோவில் மலையின் கீழ் பகுதியில் ஆயிரக்கணக்கான டன் இருடியம் உள்ளது-வழக்கறிஞர் யானைராஜேந்திரன்.