உலகத்திலேயே ஊழலுக்காக ஒரு ஆட்சி கலைக்கப்பட்டது என்றால் அது கருணாநிதி ஆட்சி தான்- எஸ்.பி.சண்முகநாதன்

by Editor / 13-04-2025 11:54:29am
உலகத்திலேயே ஊழலுக்காக ஒரு ஆட்சி கலைக்கப்பட்டது என்றால் அது கருணாநிதி ஆட்சி தான்- எஸ்.பி.சண்முகநாதன்

சாத்தான்குளம் அருகே அதிமுக சார்பில் நரேன்குடியிருப்பு பகுதியில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட  வழங்கும் நிகழ்ச்சிநடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் பேசுகையில்,

உலகத்திலேயே ஊழலுக்காக ஒரு ஆட்சி கலைக்கப்பட்டது என்றால் அது கருணாநிதி ஆட்சி தான்.இரட்டை அர்த்தத்தில் பெண்களை கொச்சப்படுத்துபவர் தான் கருணாநிதி. தமிழகத்தில் தற்போது மன்னராட்சி நடைபெறுகிறது. முதலில் கருணாநிதி, அடுத்து ஸ்டாலின், அடுத்து உதயநிதி ஸ்டாலின் வந்துள்ளனர். அடுத்ததாக இன்பநிதி ஸ்டாலினும் வரப்போகிறார். டாஸ்மாக்கில் 39 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்று உள்ளதாக  சொல்லப்படுகிறது. இதில் முதலமைச்சர் சிக்குகிறாரா, உதயநிதி சிக்குகிறாரா அல்லது செந்தில் பாலாஜி சிக்குகிறாரா என்பது தெரியவில்லை‌. அமித்ஷா சென்னை வந்த போது தமிழக முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் ஊழலுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என தெரிவித்துள்ளார். கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட இரண்டு முறையும் 300 ரூபாய் வழங்கினார். 6 ஆண்டுகள் ஆகியும் தூத்துக்குடி தொகுதியில் உள்ள கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம் உள்பட 6  சட்டமன்ற தொகுதிக்கும் எதுவும் செய்யவில்லை‌. கருணாநிதி மகள் என்ற செல்வாக்கு இருந்தும் தொழிற்சாலைகள் கொண்டு வரவில்லை.திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணிக்கு நாட்டை கொள்ளையடித்து பங்கு போடுவதே நோக்கம்.எனவே தமிழகத்தில் ஊழலற்ற  ஆட்சி வேண்டும் என்றால் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என தெரிந்து வாக்களிக்க வேண்டும் என்றார் இதனைத் தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச வேஷ்டி,சேலை,கிரைண்டர்,தையல் மிஷின் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.விழா நிகழ்வுகளை அதிமுக கிளைக் கழகச் செயலாளர் திபாகரன் செய்திருந்தார்.

 

Tags : எஸ்.பி.சண்முகநாதன்

Share via