தமிழக வெற்றிக்கழக தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெள்ளிக்கிழமையன்று
தமிழக வெற்றிக்கழகத் தலைவா் விஜய் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெள்ளிக்கிழமை அன்று மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள அறிமுக கூட்டத்தில் வெளியிட்டு ,வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கின்றார். முதற்கட்டமாக சுமார் 110 தொகுதிக்கான வேட்பாளர்களை அறிமுகப்படுத்த உள்ளார். புதுச்சேரியில் 30 தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட பின்பு புதுச்சேரி முன்னாள் பா.ஜ.க தலைவர் வி .சாமிநாதன், முன்னாள் எம்.எல்.ஏ ஏ .கே. சாய். ஜெ. சரவணன் குமார் உள்ளிட்டோர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து களமிறங்க உள்ளனர். தமிழக வெற்றி கழக சார்பாக யார் யார் போட்டியிடுகின்றாா் என்கிற விவரம் நாளை மறுநாள் தெரிந்துவிடும்.
Tags :


















