ரஷ்ய தூதரகத்தை மூடவும், அதன் ரஷ்ய தூதரை நாட்டை விட்டு வெளியேற்றவும் ருமேனிய அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
ரஷ்ய வான்வெளி அத்துமீறல்கள் அதிகரித்துள்ளதால், நேட்டோவின் பாதுகாப்பு ஆலோசனைகளுக்கான பிரிவு 4ஐப் பயன்படுத்துவது குறித்து ருமேனியா பரிசீலித்து வருகிறது..நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ருட்டே,கூட்டணியின் ஒவ்வொரு அங்குலப் பகுதியையும் பாதுகாக்க நேட்டோ தயாராக உள்ளது என ருமேனிய அதிபரிடம் உறுதியளித்துள்ளார் .
ஆளில்லா விமான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, ருமேனியாவிற்கு எதிர்-ட்ரோன் தொழில்நுட்பங்கள் மற்றும் தாழ்வார ரேடார்களை விரைவாக வழங்குமாறு நேட்டோவிடம் ருமேனியா கோரிக்கை விடுத்துள்ள இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக, கான்ஸ்டான்டா நகரில் உள்ள ரஷ்ய தூதரகத்தை மூடவும், அதன் ரஷ்ய தூதரை நாட்டை விட்டு வெளியேற்றவும் ருமேனிய அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
ரஷ்ய-ருமேனிய வெளியுறவு அமைச்சகம் இந்தச் சம்பவத்தைகடுமையான மற்றும் பொறுப்பற்ற வன்முறை எனக் கண்டித்து, புக்கரெஸ்டில் உள்ள ரஷ்ய தூதருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
சர்வதேச நாடுகளின் கண்டனம் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், ரஷ்யா மறுபடியும் ஒரு சிவப்புக் கோட்டைத் தாண்டியுள்ளது எனக் கண்டித்துள்ளார்.
பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகள் தங்களது நாடுகளில் உள்ள ரஷ்ய தூதர்களை நேரில் அழைத்து தங்களின் கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளன
.ரஷ்யா தரப்பில் அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் வெளியுறவு அமைச்சகம் இந்த குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்றும், அது உக்ரைனின் ட்ரோனாக இருக்கலாம் என்றும் கூறி பொறுப்பை மறுத்துள்ளனர்
Tags :



















