மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையகம் மீது வெடிகுண்டு வீசிய மர்ம நபர் சிசிடிவி காட்சி வெளியீடு

by Editor / 01-07-2022 12:43:00pm
 மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையகம் மீது வெடிகுண்டு வீசிய மர்ம நபர் சிசிடிவி காட்சி வெளியீடு

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகத்தில் இளைஞர் ஒருவர் வெடிகுண்டு வீசும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது .ஏகே செண்டரில்அமைந்துள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் வெடிகுண்டு எடுத்து வீசி விட்டு வேகமாக சென்று விட்டார். இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து சிசிடி உதவியுடன் வெடிகுண்டு வீசிய நபரை தேடி வருகின்றனர். இதற்கிடையில் வெடிகுண்டு வீச்சு சம்பவம் பற்றி தகவல் அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் அங்கு குவிந்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories