தொடர்மழையினால் முக்கிய நீர்தேக்கங்களில் நீர்வரத்து..நிலவரம்.

by Editor / 03-12-2024 10:31:37am
தொடர்மழையினால் முக்கிய நீர்தேக்கங்களில் நீர்வரத்து..நிலவரம்.

கரூர் மாவட்டம், மாயனூர் கதவணை.

நீர்மட்டம்  5.10 மீட்டர்
(மொத்த உயரம் 5.10 மீட்டர்)நீர் இருப்பு 984.95 மில்லியன் கன அடி,( மொத்த கொள்ளளவு 985 மில்லியன் கன அடி)நீர்வரத்து வினாடிக்கு ,6898 கன அடி,நீர் வெளியேற்றம் 6898 கனஅடி.

பவானிசாகர் அணை நீர்மட்டம்.

அணை நீர்மட்டம் 97.88 அடி (மொத்த உயரம் 105 அடி),நீர் இருப்பு 27.1 டிஎம்சி (மொத்த கொள்ளளவு 32.8 டிஎம்சி),அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 3222 கன அடி,அணையிலிருந்து நீர் வெளியேற்றம் 500 கன அடி.

பாலாறு அணைக்கட்டு தடுப்பனையிலிருந்து 2308 கன அடி நீர் வெளியேற்றம் 

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பகுதியில் அமைந்துள்ள பாலாறு அணைக்கட்டு தடுப்பனையிலிருந்து 2308 கன அடி நீர் வெளியேற்றம்.இதில் முழுமையாக மகேந்திரவாடி ஏரிக்கு 402 கன அடி நீரும்,காவேரிப்பாக்கம் ஏரிக்கு 842 கன அடி நீரும்,சக்கரவல்லூர் ஏரிக்கு 
157 கன அடி நீரும்,தூசி கால்வாய் ஏரிக்கு 307 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வருவதாக ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம்தகவல்.


புழல் ஏரியின் நீர் வரத்து குறைந்தது.

 புழல் ஏரியின் மொத்த கொள்ளளவான 3300 மில்லியன் கன அடியில் தற்போது 2763 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. இந்த ஏரிக்கு நேற்று 876 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது 730 கன அடி நீர்வரத்து குறைந்து வந்து கொண்டிருக்கிறது. சென்னை குடிநீருக்காக 209 கன அடி நீர் அனுப்பப்பட்டு வருகிறது.

சோழவரம்.

சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு ஆன 1081 மில்லியன் கனடியில் தற்போது 157 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது இந்த ஏரிக்கு  223 கன அடியாக வந்துகொண்டிருக்கிறது.

பூண்டி ஏரியின் நீர் வரத்து குறைந்தது.

பூண்டி ஏரியின் முழு கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியில் தற்போது 1211 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது இந்த ஏரிக்கு நேற்று வினாடிக்கு 3500 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது 3440 கன அடியாக குறைந்நது. சென்னை குடிநீருக்காக 360 கன அடி நீர் அனுப்பப்பட்டு வருகிறது.

கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை.

கண்ணன்கோட்டை ஏரியின் முழு கொள்ளளவான 500 மில்லியன் கன அடியில் தற்போது 325 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது இந்த ஏரிக்கு நேற்று 15 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது 30 கன அடியாக அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது

 

Tags : தொடர்மழையினால் முக்கிய நீர்தேக்கங்களில் நீர்வரத்து..நிலவரம்.

Share via