மேஷம்
செப்டம்பர் 12, 2025
சஞ்சலமான சிந்தனைகள் மூலம் குழப்பங்களும் விரயங்களும் நேரிடும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் இருந்த மந்த தன்மை விலகும். பயணம் மூலம் சிந்தனைகளில் சில தெளிவுகள் ஏற்படும். எந்த ஒரு செயலிலும் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். நெருக்கமானவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். லாபம் நிறைந்த நாள்.