மேஷம்
நவம்பர் 12, 2025
உறவுகளிடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். நெருக்கடியான சில சூழ்நிலை சமாளிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். கல்வி பணிகளில் இருந்த ஆர்வமின்மை குறையும். வேலை மாற்றம் சார்ந்த எண்ணங்கள் கைகூடிவரும். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் அமையும். மறைமுகமான சில எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். நற்செயல் நிறைந்த நாள்.