மேஷம்
டிசம்பர் 13, 2025
மனதில் புதிய எண்ணங்கள் பிறக்கும். வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். கடன் தொல்லை ஓரளவு குறையும். நண்பர்கள் பற்றிய புரிதல் மேம்படும். எதிர்பாராத சில வரவுகளால் கையிருப்புகள் அதிகரிக்கும். வியாபார அணுகுமுறைகளில் சில மாற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் மேன்மை ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.